எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் கோதை காலமானார்

எத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் கோதை காலமானார்
Updated on
1 min read

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ளஎத்திராஜ் மகளிர் கல்லூரி முதல்வர் கோதை (56), உடல்நலக்குறைவால் ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று மாலை உயிரிழந்தார். கடந்த 25 ஆண்டுகளாக எத்திராஜ் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி வந்த கோதை, 2019 முதல் கல்லூரியின் முதல்வராகப் பொறுப்புவகித்து வந்தார் வேதியியல் துறை பேராசிரியரான கோதை,பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். அவரது மறைவு சக பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையொட்டி,கல்லூரிக்கு இன்று (செப். 21) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in