கோயம்பேடு நேரு பூங்கா சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலை 80 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை

கோயம்பேடு நேரு பூங்கா சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலை 80 கி.மீ. வேகத்தில் இயக்கி சோதனை
Updated on
1 min read

ஜனவரியில் பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா இடையே சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயிலை முதல்முறையாக 80 கி.மீ. வேகத் தில் இயக்கி சோதனை மேற் கொள்ளப்பட்டது.

சென்னையில் தற்போது, பரங்கிமலை கோயம்பேடு, விமான நிலையம் சின்னமலை கோயம்பேடு வரையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அடுத்தகட்டமாக கோயம்பேட்டில் இருந்து நேரு பூங்கா வரையில் மொத்தம் 8 கி.மீ. தூரத்துக்கு சுரங்கப் பாதையில் கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இது தொடர்பாக மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது:

கோயம்பேடு, திருமங்கலம், அண்ணாநகர் டவர், ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப் பாக்கம், நேரு பூங்கா வரையில் சுரங்கப் பாதையில் சோதனை முறையில் 8 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதிகபட்சமாக 80 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்களை சமீபத்தில் இயக்கியுள்ளோம். சிக்னல் செயல்பாடுகள் உள் ளிட்ட பல்வேறு பிரிவுகளில் ஒப்புதல் பெற்று வருகிறோம்.

சுமார் 20 மீட்டர் ஆழத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக் கப்பட்டுள்ளன. இதற்கு மேலே இருக்கும் முதல்தளத்தில் டிக் கெட் கவுன்ட்டர்களும், பயணி கள் சேவை மற்றும் பாது காப்பு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ரயில் பாதையில் ஒவ்வொரு 250 மீட்டர் தூரத்துக்கும் அவசர வழிகள் அமைக்கப் பட்டுள்ளன. ரயில்வே துறையில் தெற்கு மண்டலத்துக்கு சமீபத்தில் புதியதாக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் ஜனவரியில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் தலைமை யிலான குழு வந்து ஆய்வு நடத்தும் என எதிர்பார்க்கிறோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in