டிடிவி தினகரன் | கோப்புப் படம்
டிடிவி தினகரன் | கோப்புப் படம்

இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் | பாதிப்பு பெரிதாக இல்லை என்று கூறி அலட்சியம் கூடாது: தினகரன்

Published on

சென்னை: இன்ஃப்ளுயன்சா காய்ச்சல் பாதிப்பு பெரிதாக இல்லை என்று கூறி அலட்சியமாக இருந்துவிடக்கூடாது என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழகம் முழுவதும் சிறுவர்-சிறுமியரிடையே பரவிவரும் இன்ஃப்ளுயன்சா காய்ச்சலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும்.

பாதிப்பு பெரிதாக இல்லை என்று கூறி அலட்சியமாக இருந்து விடக்கூடாது. மாவட்டந்தோறும் இதற்கான சிறப்பு குழுக்களை அமைத்து கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." என்று தினகரன் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in