கோவை சின்னியம்பாளையத்தில் வங்கி முன் காத்திருந்தவர்கள் மீது கார் மோதி கர்ப்பிணி உட்பட 10 பேர் காயம்

கோவை சின்னியம்பாளையத்தில் வங்கி முன் காத்திருந்தவர்கள் மீது கார் மோதி கர்ப்பிணி உட்பட 10 பேர் காயம்
Updated on
1 min read

கோவை சின்னியம்பாளையத்தில் வங்கியில் பணம் எடுக்க காத்திருந்தவர்கள் மீது கார்கள் மோதியதில், 2 குழந்தைகள், கர்ப்பிணி உட்பட 10 பேர் காயம் அடைந்தனர்.

கோவையில் அனைத்து வங்கி களிலும், ஏடிஎம் மையங்களிலும் பணப் பரிவர்த்தனைக்காக நேற்று மக்கள் நீண்ட நேரம் வரிசை யில் காத்திருந்தனர். சின்னியம் பாளையத்தில் உள்ள இந்தியன் வங்கியின் ஏடிஎம் மையம் முன்பு 50-க்கும் மேற்பட்டோர் காத்தி ருந்தனர்.

நேரு நகரைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது குடும்பத்தினரை அழைத்துக்கொண்டு பணம் எடுப்பதற்காக அந்த வங்கிக் கிளைக்கு வந்தார். காரில் மனைவி, குழந்தைகளை அமர்த்திவிட்டு, பணம் எடுப்பதற்காக வங்கிக்குள் சென்றிருந்தார். மக்கள் வரிசையை ஒட்டி, சாலையோரத்தில் வாக னங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

2 குழந்தைகள்

அப்போது மதியம் சுமார் 3 மணியளவில் அவினாசி சாலையில் பீளமேடு பகுதியில் இருந்து சின்னி யம்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்த கார் ஒன்று, சின்னி யம்பாளையம் அருகே நிலை தடுமாறி சாலையோரத் தடுப்பை இடித்துக்கொண்டு வங்கிக் கிளைக்கு முன்புறம் நின்றிருந்த செல்வராஜின் காரின் மீது வேகமாக மோதியது.

அதில் அந்த கார் சில அடி தூரம் முன்னோக்கிச் சென்று வரிசையில் பணம் எடுக்கக் காத்திருந்தவர்கள் மீது மோதியது. இதில் காரின் உள்ளே அமர்ந்திருந்த செல்வராஜின் மனைவி கர்ப்பிணி ஜா(27), அவர்களது குழந்தை கள் யாஷனா(4), 9 மாதக் குழந்தை ஹன்ஷிகா ஆகியோர் காயமடைந்தனர்.

வங்கியில் பணம் எடுப்ப தற்காக நின்றிருந்த சின்னியம் பாளையத்தைச் சேர்ந்த மாகாளி, நந்தகுமார், ராதாகிருஷ்ணன் உட் பட 10 பேர் காயம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு உள்ள தனியார் மருத்துவமனை களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கார் மீதும், மக்கள் மீதும் மோதி விபத்தை ஏற்படுத்திய காரை மக்கள் சுற்றி வளைத்தனர். அங்கு வந்த கோவை மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு (கிழக்கு) போலீஸார் காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் சஞ்சய்குமார்(19) என்பவரிடமும், உடன் பயணித்த சஞ்சய் என்பவ ரிடமும் விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in