Published : 24 Nov 2016 09:05 am

Updated : 24 Nov 2016 09:05 am

 

Published : 24 Nov 2016 09:05 AM
Last Updated : 24 Nov 2016 09:05 AM

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஆய்வகம் திறப்பு: குறட்டை நோயால் பெண்களைவிட ஆண்கள் அதிகம் பாதிப்பு

குறட்டை நோயால் பெண்களை விட ஆண்களே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை பிரிவின் துறைத் தலைவர் டாக்டர் எம்.என்.சங்கர் தெரிவித்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் செலவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘குறட்டை ஒலி ஆய்வகம்’ திறப்பு விழா நேற்று நடந்தது. காது, மூக்கு, தொண்டை பிரிவின் துறைத் தலைவர் டாக்டர் எம்.என்.சங்கர் விழாவுக்கு தலைமை தாங்கினார். டாக்டர்கள் இருதய ராஜ், ஆண்டனி, முத்துசித்ரா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவமனை டீன் ஐசக் கிறிஸ்டியன் மோசஸ், ஆர்எம்ஓ ரமேஷ் ஆகியோர் குறட்டை ஒலி ஆய்வகத்தை திறந்துவைத்த னர்.

இந்த குறட்டை நோய் பற்றி மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை பிரிவின் துறைத் தலைவர் டாக்டர் எம்.என்.சங்கர் கூறியதாவது:

தூங்கும்போது ஏற்படும் சுவாசக் கோளாறுகளால் குறட்டை ஏற்படுகிறது. ஆண்களில் 7 சதவீதம் பேரும், பெண்களில் 4 சதவீதம் பேரும் குறட்டை நோய்க்கு ஆளாகின்றனர். குறட்டை நோய்க்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெற்றால், நோயை குணப்படுத்திவிடலாம். இல்லை யென்றால் சுவாசக் குழாய் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்படும். ரத்தக் கொதிப்பு, இதய நோய், சர்க்கரை நோய், பக்கவாதம் வருவதற்கும் வாய்ப்புள்ளது. உடல் பருமன், புகைபிடித்தல், மது அருந்துதல், மரபு வழி குறைபாடுகள் ஆகியவை குறட்டை நோய்க்கு முக்கிய காரணங்களாக உள்ளன. குறட்டை மற்றும் அதனால் ஏற்படும் மூச்சுத் திணறலை குணப்படுத்த தனியார் மருத்துவமனைகளில் ரூ.2 லட்சம் வரை செலவாகும். அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் இலவசமாக செய்யப்படுகிறது.

இவ்வாறு டாக்டர் எம்.என்.சங்கர் தெரிவித்தார்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அரசு ஸ்டான்லி மருத்துவமனைஆய்வகம் திறப்புகுறட்டை நோy. பெண்களைவிட ஆண்கள். அதிகம் பாதிப்பு

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author