அரசு வழங்கிய வீட்டு மனையை மீட்டுத் தரக் கோரி  சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த ஆதிதிராவிடர்கள்.
அரசு வழங்கிய வீட்டு மனையை மீட்டுத் தரக் கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்த ஆதிதிராவிடர்கள்.

காளையார்கோவிலில் அரசு வழங்கிய இடத்தை மீட்க 25 ஆண்டுகளாக போராடும் ஆதிதிராவிடர்கள்

Published on

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் அரசு வழங்கிய இடத்தை மீட்க ஆதிதிராவிடர்கள் 25 ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.

காளையார்கோவில் பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர்களுக்கு 1997-ம் ஆண்டு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்பட்டன. மொத்தம் 52 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது.

ஆனால், அந்த இடத்தில் தனியார் கல்லூரி கட்டிடம் கட்டப்பட்டது. அந்த இடத்தை மீட்டுத் தர வேண்டுமென பாதிக்கப்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடர்ந்து மனு கொடுத்து வந்தனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்டோருக்கு வேறு இடம் வழங்குவதாகவும், இதுதொடர்பாக ஆதிதிராவிடர் நலத்துறை தலைமை அலுவலகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் இதுவரை இடம் கிடைக்காதநிலை உள்ளது.

இதையடுத்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in