Published : 19 Sep 2022 03:41 PM
Last Updated : 19 Sep 2022 03:41 PM

காலநிலை மாற்றத்தால் சென்னை ரயில் நிலையங்கள் கடலில் முழ்குமா? - எம்எல்ஏ கேள்வியும், மேயர் பிரியா பதிலும்

சென்னை மெயர் பிரியா | கோப்புப் படம்

சென்னை: “காலநிலை மாற்றம் காரணமாக சென்னையில் ரயில் நிலையங்கள் கடலில் முழ்குமா?” என்று சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளதாக என்று மேயரிடம் சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.

சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் "நெகிழ் திறன், உந்துதலுடன் சென்னை" என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6 தலைப்புகளில் இந்தச் செயல் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கடல் மட்டம் உயர்வால் சென்னை அதிக பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கடல் மட்டம் அடுத்த 5 ஆண்டுகளில் 7 செ.மீ உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 100 ஆண்டுகளில் பேருந்து நிறுத்தங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், புறநகர் ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் மூனறாம் முழுமைத் திட்டம் தொடர்பான பயிலரங்களில் இந்த அறிக்கை தொடர்பாக நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இந்தச் செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிடம், சென்னையில் கடல் மட்டம் உயர்ந்தால் ரயில் நிலையங்கள் கடலில் முழ்கும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளதாக என்று கேட்டார். அதற்கு அருகில் இருந்து செய்தியாளர்கள், “அறிக்கையில் உள்ளதுதான் சார், நான் தருகிறேன்” என்று கூறினார். உடனே சென்னை மாநகராட்சி மேயர், “அவரிடமே வாங்கி கொள்ளுங்கள்” என்று தெரிவித்துவிட்டு சென்று விட்டார்.

காலநிலை மாற்றம் தொடர்பான திட்ட வரைவு அறிக்கை பொதுமக்கள் கருத்து கேட்க இணையதளத்தில் வெளியிடப்பட்டு 6 நாட்கள் ஆன நிலையில், மக்கள் பிரநிதிகள் ஆகிய சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இது தொடர்பான தகவலை சென்னை மாநகராட்சி தெரிவிக்கவில்லை என்பதைதான் இந்தக் காட்சிகள் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x