Published : 19 Sep 2022 06:57 AM
Last Updated : 19 Sep 2022 06:57 AM
சென்னை: திமுக உட்கட்சித் தேர்தலில் மாவட்டச் செயலர், அவைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும்22-ம் தேதி முதல் மனு தாக்கல் தொடங்குவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: திமுகவின் 15-வது பொதுத்தேர்தல், புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் அடிப்படையில் நடைபெறுகிறது. மாவட்டச் செயலர், அவைத் தலைவர், 3 துணைச்செயலர்கள், பொருளாளர், தலைமை செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள்ஆகிய பொறுப்புகளுக்கு போட்டியிடுவோர், உரிய படிவத்தில்பூர்த்திசெய்து, ஒரு பொறுப்புக்கு ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்த வேண்டும்.
செப்.22-ம் தேதி கன்னியாகுமரி கிழக்கு, மேற்கு, தூத்துக்குடி வடக்கு, தெற்கு, திருநெல்வேலி கிழக்கு, மத்திய மாவட்டம், தென்காசி வடக்கு, தெற்கு, விருதுநகர் வடக்கு, தெற்கு, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் கிழக்கு,மேற்கு, தேனி வடக்கு, தெற்கு,மதுரை வடக்கு, தெற்கு,மாநகர் ஆகிய மாவட்டங்களுக்கு போட்டியிடுவோர் மனு தாக்கல் செய்யலாம்.
நீலகிரி, ஈரோடு வடக்கு, தெற்கு,திருப்பூர் வடக்கு, தெற்கு, கோவைவடக்கு, தெற்கு, மாநகர், கிருஷ்ணகிரி கிழக்கு, மேற்கு, தருமபுரி கிழக்கு, மேற்கு, நாமக்கல் கிழக்கு,மேற்கு, சேலம் கிழக்கு, மேற்கு, மத்திய மாவட்டம், கரூர், திருச்சிவடக்கு,தெற்கு, மத்திய மாவட்டங்களுக்கு போட்டியிடுவோர் வரும்23-ம் தேதி மனு தாக்கல் செய்யலாம்.
புதுக்கோட்டை வடக்கு, தெற்கு,அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை வடக்கு (மயிலாடுதுறை), நாகை தெற்கு, தஞ்சை வடக்கு, தெற்கு, மத்திய மாவட்டம், கடலூர் கிழக்கு, மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு,தெற்கு, விழுப்புரம் வடக்கு, மத்திய மாவட்டங்களுக்கு போட்டியிடுவோர் வரும் 24-ம் தேதி விண்ணப்பிக்கலாம்.
வேலூர் கிழக்கு (ராணிப்பேட்டை), வேலூர் மத்திய மாவட்டம், மேற்கு (திருப்பத்தூர்), திருவண்ணாமலை வடக்கு, தெற்கு,காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, மத் திய மாவட்டம், சென்னை வடக்கு,வடகிழக்கு, கிழக்கு, மேற்கு, தென்மேற்கு, தெற்கு மாவட்டங்களுக்கு வரும்25-ம் தேதி மனு தாக்கல் செய்யலாம். தலைமைக் கழகத்தில் ரூ.1,000கட்டணம் செலுத்தி விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.
மாவட்ட அமைப்புகள் மாற்றம்: நிர்வாக வசதிக்காக கோவை, திருப்பூர், தருமபுரி, மதுரை மாநகர் மாவட்டங்களுக்கு உட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. அதன்படி, கோவை மாநகர் மாவட்டத்தில் சிங்காநல்லூர், கோவை தெற்கு, கோவை வடக்குதொகுதிகளும், கோவை வடக்கில் மேட்டுப்பாளையம், தொண்டாமுத்தூர், கவுண்டம்பாளையம், அவிநாசி தொகுதிகளும், கோவை தெற்கில் சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை (தனி), பொள்ளாச்சி தொகுதிகளும், திருப்பூர் வடக்கில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம் தொகுதிகளும், திருப்பூர் தெற்கில் உடுமலைப்பேட்டை, மடத்துக்குளம், தாராபுரம், காங்கேயம் தொகுதிகளும் இடம்பெற்றுள்ளன. இதேபோல, மதுரை மாநகர் மாவட்டத்தில் மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மேற்கு, மத்திய மத்திய தொகுதிகளும், தருமபுரி கிழக்கில் தருமபுரி, பென்னாகரம் தொகுதிகளும், தருமபுரி மேற்கில் அரூர் (தனி), பாப்பிரெட்டிபட்டி, பாலக்கோடு தொகுதிகளும் அடங்கியதாக மாவட்டக் கழகங்கள் அமையும். இவ்வாறு துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT