

முறையான பயிற்சி அளித்தால் வணிகர்கள் ஸ்வைப் மெஷினை பயன்படுத்த தயாராக இருக்கிறோம் என தமிழ்நாடு வணிகர் சங் கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா கூறினார்.
பண மதிப்பு நீக்க அறி விப்பு தொடர்பான 12 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிர மராஜா தலைமையில் சேப் பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தின்போது ஏ.எம்.விக்கிரமராஜா செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
ரூபாய் நோட்டுகள் செல் லாது என்ற அறிவிப்பு வெளி யாகி 21 நாட்களுக்குப் பிறகும் பணப்புழக்கம் சீரடைய வில்லை. ரொக்கப் பண மில்லாத டிஜிட்டல் பரிவர்த் தனைக்கு மாற வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ரொக்கப்பண பரிமாற்றம் என்பது சிறு வணி கர்கள், சாதாரண மக்க ளின் வாழ்வில் ஒன்றிப் போய் உள்ளது. வாடிக்கை யாளர்களின் வசதிக்கேற்ப நாங்கள் வணிகத்தை நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளோம். ஒரு நாளில் அதை மாற்றிவிட முடியாது.
கிரெடிட் அல்லது டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்துவதற்கான ஸ்வைப் மெஷின்களை பயன்படுத்த வணிகர்கள் தயாராக உள் ளோம். ஆனால், படிக்காத பல பேர் வணிகர்களாக உள்ளனர். எனவே, அவர்களுக்கு அந்த இயந்திரத்தைப் பயன்படுத்து வது குறித்து அரசு பயிற்சி அளிக்க வேண்டும். ஸ்வைப் மெஷினை பயன்படுத்த விதிக் கப்படும் வரியையும் குறைக்க வேண்டும்.
வணிகர்கள் வருமான வரி கட்ட அச்சப்படவில்லை. வரு மானவரி விதிமுறைகளை எளிமைப்படுத்தினால் மட்டுமே அனைத்து மக்களும், வணிகர்களும் வங்கி யில் முழு பரிவர்த்தனை செய்வதற்கும், டிஜிட்டல் முறையில் மாறுவதற்கும் வழிவகை ஏற்படும்.
வருமான வரி விலக்கு
எனவே, இன்றைய விலை வாசியை அடிப்படையாகக் கொண்டு வருமான வரி விலக்கு வரம்பை ரூ.10 லட்சமாக அரசு உயர்த்த வேண்டும்.
மேலும், தமிழ்நாடு வணி கர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 12 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி பிரதமர், நிதி அமைச்சர், ரிசர்வ் வங்கி கவர்னர் உள்ளிட்டோருக்கு மனு அனுப்பியுள்ளோம். கோரிக்கை குறித்து டிசம் பர் முதல் வாரம் நிதி அமைச் சர் மற்றும் உயர் அதிகாரி களைச் சந்திக்க உள்ளோம். அதன்பிறகும், தீர்வு கிடைக்கா விட்டால் தொடர் கடையடைப்பு போராட்டம் நடத்துவது குறித்து ஆட்சிமன்றக் குழுவில் முடிவெடுப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.