

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சளி, காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த வாரம் வரை தினமும் தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதனால், குளிர்ந்த தட்ப வெப்பநிலை நிலவியது. கடந்த ஒரு வாரமாக திண்டுக் கல் மாவட்டத்தின் பல பகுதி களில் வெயிலின் தாக்கம் அதி கரித்துக் காணப்படுகிறது.
தட்ப வெப்ப நிலை மாற்றத்தால் பொதுமக்கள் பலரும் உடல்நிலை பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக சிறுவர்களுக்கு சளி, காய்ச்சல் அதிகரித்து வருகிறது.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தின மும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் பல்வேறு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வருவோர் எண் ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்பு காரணமாக சிகிச்சைக்கு வருகின்றனர். இதில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சிறுவர்கள்.
முதற்கட்டமாக சளி, காய்ச்சல் பாதிப்புக்கு ஊசி போட்டும், மருந்து மாத்திரை கொடுத்தும் அனுப்புகின்றனர். தீவிரப் பாதிப்பு யாருக்கும் இல்லாததால் வெளிநோயாளியாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
மாவட்டத்தில் கிராமப்புறங் களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் காய்ச் சல் காரணமாக சிகிச்சைக்கு வருவோர் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்படுகிறது.
பெரும் பாதிப்பு இல்லாத நிலையில் தொடக்கத்திலேயே காய்ச்சல் மேலும் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந் துள்ளது.