

என்ஆர் காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நிகழ்வதாக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இக்கழகத்தின் மாநிலச் செயலாளர் விஜயா விடுத்துள்ள அறிக்கை:
புதுச்சேரியில் 15 வயது சிறுமியை அடைத்து வைத்து பாலியல் வன்கொடுமை செயல்களில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு செல்வாக்குடன் இருந்தாலும் அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.
அரசியல் குறுக்கீடுகள் எதுவும் இருப்பின் காவல்துறை முழுவதுமாக நிராகரிக்க வேண்டும். என்ஆர் காங்கிரஸ் - பாஜக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை கொடி கட்டி பறக்கிறது. கைதானவர்களை பிணையில் விடக்கூடாது. குற்றவாளிகள் எவருக்கும் முன் ஜாமின் வழங்கக் கூடாது.
சீரழிந்த சுற்றுலா கலாச்சாரமே பெண்களுக்கு எதிரான கொடும் குற்றங்களுக்கு காரணமாகும். பெண்கள் விரோத சுற்றுலா கொள்கைகளை புதுச்சேரி அரசு உடனடியாக கைவிட வேண்டும்.
புதுச்சேரி அரசின் அலட்சியத்திற்கு எதிராக அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் அனைத்து பெண்கள் அமைப்புகளையும் ஒன்று திரட்டி போராடும். ஆளுநர் தமிழிசை நிர்வாகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.