

வங்கக் கடலில் மையம் கொண் டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி இருப்பதைத் தொடர்ந்து, தமிழகத் தில் வட கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் எஸ்.பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலசந்திரன் நேற்று கூறிய தாவது:
மத்திய கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது மாறியுள்ளது. இது மத்திய வங்கக் கடல் பகுதியில், விசாகப் பட்டினத்துக்கு தென்கிழக்கே சுமார் 570 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப் பெற்று வடமேற்கு திசையில் மத்திய மேற்கு வங்கக் கடலை நோக்கி நகர்ந்து புயலாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், தென் மாவட்டங் களில் அனேக இடங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதைத் தொடர்ந்து, சென்னை கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங் களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மீனவர் களுக்கு எந்த எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.