

தமிழக நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக்கை களுக்கு, அதிமுக அரசு ஒத்துழைத்து வருகிறது எனக்கூறி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சிறப்பு மாநாட்டில் கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக் கட்சியின் 3 நாள் மாநில சிறப்பு மாநாடு நேற்று நிறைவடைந்தது. மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர் மானங்கள்: தமிழகத்தில் அனைத்து துறைகளும் நெருக்கடியில் சிக்கி யுள்ளன. தமிழக நலன்களுக்கு எதிரான மத்திய அரசின் நடவடிக் கைகளுக்கு, தமிழக அரசு ஒத்துழைத்து வருவது கண்டிக் கத்தக்கது.
காவிரி மேம்பாட்டு ஆணை யத்தை அமைக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை நிராகரித்து, தமிழகத்துக்கு மத்திய அரசு துரோகம் இழைத்துவிட்டது. சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,850 கோடிக் கும் அதிகமாக பாக்கி உள்ளது. இதைப் பெற்றுத்தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. நடப்பு ஆண்டுக்கு கரும்புக்கான விலையை இதுவரை அறிவிக்க வில்லை.
மின்துறையை முழுமையாக தனியார்மயமாக்கும் `உதய்’ திட்டத்துக்கு அதிமுக அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அரசுப் பள்ளிகள் திட்டமிட்டு மூடப்படுகின்றன. வேலைவாய்ப்புக்கான மத்திய அரசு தேர்வுகளை தமிழ் உள் ளிட்ட மாநில மொழிகளிலும் எழுத மத்திய அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.
தமிழகத்தில் வழிப்பறி, திருட்டு, கொள்ளை தடையின்றி நடந்து வருகின்றன. ரயில் கொள்ளை வழக்கில் இன்னும் துப்பு துலக் கப்படவில்லை. ஆணவ கொலை கள், தீண்டாமை கொடுமை கள் தொடர்வது மட்டுமின்றி, சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக் கப்படுவதில்லை. அரசு மருத்துவ மனைகளில் போதுமான அடிப் படை வசதிகள் இல்லை. இதுபோன்றவற்றுக்கு மாநாட்டில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண் டும். வேலைவாய்ப்புகளை உரு வாக்க வேண்டும். காவிரி மேம் பாட்டு வாரியத்தை அமைக்க வேண்டும் என வலியுறுத்தி, டிசம்பர் 20-ம் தேதி தமிழகம் முழுவதும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
தேர்தலில் ஆதரவு இல்லை
இதற்கிடையே செய்தியாளர் களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ‘‘தமிழகம், புதுச்சேரியில் 4 தொகுதிகளுக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி யாரையும் ஆதரிக்கவில்லை.
மக்கள் நலக்கூட்டணி என்பது தேர்தலுக்காக ஏற்படுத்தப்பட்டது. தற்போது மக்கள் நலக் கூட்டி யக்கமே நீடிக்கிறது. மாற்று அரசியல் என்ற கொள்கை அடிப்படையில் நாங்கள் தனித்து பல்வேறு இயக்கங்களை நடத்தும் அதேநேரத்தில், ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்தும் மக்கள் பிரச்சினைகளுக்காக போராட்டங் களை நடத்துவோம்’’ என்றார்.