

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட 13 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.
500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்து நாடு முழு வதும் கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று பந்த் நடத்தினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ கத்தில் திமுக, காங்கிரஸ் உள் ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
போலீஸார் அனுமதி வழங் காததால் தடையை மீறி தமிழகம் முழுவதும் திமுகவினர், காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத் தினர். பல இடங்களில் சாலை மறியலும் நடத்தப்பட்டது.
தடையை மீறி ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் மட்டும் 3,409 பேர் கைது செய்யப்பட்டனர். தமிழகம் முழுவதும் மொத்தம் 13 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். கைதானவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.