வங்கி ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் விநியோகம்: ஓரிரு நாட்களில் ரூ.500 கிடைக்கும் என தகவல்

வங்கி ஏடிஎம்களில் 2,000 ரூபாய் நோட்டுகள் விநியோகம்: ஓரிரு நாட்களில் ரூ.500 கிடைக்கும் என தகவல்
Updated on
1 min read

வங்கி ஏடிஎம்களில் நேற்று 2,000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்பட்டன. ஓரிரு தினங்களில் 500 ரூபாய் நோட்டும் கிடைக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய அரசு 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததையடுத்து புதிதாக 2,000 ரூபாய் நோட்டு களை புழக்கத்துக்கு விட்டுள்ளது. இப்புதிய 2,000 ரூபாய் நோட்டு களை வங்கிகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலம் பொதுமக்கள் பெற்று வருகின்றனர்.

புதிய 2,000 ரூபாய் நோட்டு களை பொது இடங்களில் பயன் படுத்துவதில் தற்போது சிரமமான சூழ்நிலை காணப் படுகிறது. புதிய 500 ரூபாய் நோட் டுகள் புழக்கத்துக்கு வராததாலும், 100 ரூபாய் நோட்டுகள் போதுமான அளவுக்கு கிடைக்காததாலும் புதிய 2,000 ரூபாய் நோட்டுக்கு சில்லறை கிடைப்பது சிரமமாக உள்ளது.

இந்நிலையில், வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் மட்டுமே கொடுத்து வந்த புதிய 2,000 ரூபாய் நோட்டுகளை ஏடிஎம்கள் மூலம் விநியோகம் செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப் பட்டது. இதன்படி, சென்னையில் நேற்று சில இடங்களில் இந்தியன் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் ஏடிஎம்களில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைத்தன. கடந்த 4 நாட்களாக ஏடிஎம்களில் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைத்து வந்த நிலையில், நேற்று புதிய 2,000 ரூபாய் நோட்டுகளும் கிடைத்த தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நாளை முதல் தமிழகம் முழுவதும் ஏடிஎம்களில் புதிய 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கியில் 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற அதி காலை முதலே மக்கள் வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் அனை வருக்கும் நேற்று பழைய நோட்டு களுக்கு பதில் ரூ.4 ஆயிரத்து 500 வழங்கப்பட்டது. அதில், ஒரு 2,000 ரூபாய் நோட்டு, மீதமுள்ள ரூ.2,500-க்கு சில்லறை நாணயங் களாகக் கொடுத்தனர். 2,000 ரூபாய்க்கு 10 ரூபாய் நாணய மாகவும், ரூ.500-க்கு 5 ரூபாய் நாண யங்களாகவும் வழங்கப்பட்டது.

இதற்கிடையே புதிய 500 ரூபாய் நோட்டுகள் சென்னை ரிசர்வ் வங்கிக்கு வந்துள்ளதாக தெரிகிறது. எனவே, இன்னும் ஓரிரு நாட்களில் புதிய 500 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் ஏடிஎம்கள் மூலம் விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in