

‘‘அரசு போக்குவரத்து ஊழியர் களுக்கு ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் வரையில், இடைக்கால நிவாரணமாக ரூ.3 ஆயிரம் தரப்பட வேண்டும்’’ என்று பேரவையில் மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்தது.
சட்டப்பேரவையில் புதன்கிழமை நடந்த போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் விவரம் வருமாறு:
சவுந்தரராஜன் (மார்க்சிஸ்ட்):
ஆம்னி பஸ்களின் எண்ணிக்கை 200ல் இருந்து ஆயிரமாக உயர்ந் துள்ளது. அரசு பஸ்கள் சிறப்பா கச் செயல்பட்டால் இதைத் தடுக்க லாம். ஆம்னி பஸ்களில் சட்ட விரோதமாகக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. எனவே, தீவிர சோதனை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும்.
அமைச்சர் செந்தில் பாலாஜி:
தமிழகத்தில் அரசு பஸ்களின் செயல்பாட்டால் ஆம்னி பஸ்கள் முடங்கிக் கிடக்கின்றன. ஒரு ஆம்னி பஸ் உரிமையாளர், 10 பஸ்களை இயக்காமல் வைத்தி ருக்கிறார். பண்டிகைக் காலத்தில் கோயம்பேட்டில் அரசு பஸ் நிலையத்துக்கு வந்து ஆம்னி பஸ்காரர்கள் கூவிக் கூவி பயணி களை அழைத்தனர்.
சவுந்தரராஜன்:
பணியின் போது பிடித்தம் செய்யப்பட்ட நிதி, ஓய்வு பெற்ற பின்பும் அவர்களுக்கு பல ஆண்டுகளாக தரப்படாமல் உள்ளது. அதை உடனடியாகத் தரவேண்டும். போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் உள்ளது. அது அறிவிக்கப்படும் வரை, ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரம் இடைக்கால நிவாரணமாகத் தரவேண்டும்.
அமைச்சர்:
ஓய்வு பெற்றவர் களுக்கு ரூ.928 கோடி நிலுவையை கடந்த திமுக ஆட்சியில் வைத்துச் சென்றார்கள். இந்த ஆட்சியில் 3 ஆண்டில் 1,114 கோடி திருப்பித் தரப்பட்டுள்ளது.
இவ்வாறு விவாதம் நடந்தது.