பெரியார் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் மரியாதை

பெரியார் பிறந்ததினம் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
பெரியார் பிறந்ததினம் முதல்வர் ஸ்டாலின் மரியாதை
Updated on
1 min read

சென்னை: தந்தை பெரியாரின் 144-வது பிறந்ததினத்தையொட்டி, அண்ணா சாலையில் உள்ள அவரது சிலையின் கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தந்தை பெரியாரின் 144-வது பிறந்த நாளையொட்டி தமிழக அரசின் சார்பில் முதல்வர் மு.க. ஸ்டாலின், சென்னை அண்ணா சாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு இன்று காலை மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுரகன், கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் மற்றும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

தந்தை பெரியார் பிறந்தநாளான செப்டம்பர் 17ஆம் நாள், அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அவரது பிறந்த நாள் சமூக நீதி நாளாக கடந்த ஆண்டு முதல் கடைபிடிக்கப்பட்டு, அனைத்து அரசு அலுவலகங்களிலும் உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in