

தஞ்சையில் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய வைத்திருந்த ரூ.6.48 லட்சம் பறிமுதல் செய்யப் பட்டது. இதுதொடர்பாக அதிமுக, திமுகவைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதியில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. வாக் குப்பதிவுக்கு இன்னும் 4 நாட் களே உள்ள நிலையில் வாக்காளர் களுக்கு பணம் விநியோகம் தீவிர மாக நடந்து வருவதாக எழுந்த புகார்களின் அடிப்படையில், துணை ராணுவத்தினருடன் தேர்தல் பறக் கும் படையினர் தீவிர சோதனை மற்றும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலை இ.பி. காலனியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்படுவ தாக தகவல் வந்ததையடுத்து பறக்கும் படை குழுவினர் அங்கு சென்றனர். அங்குள்ள, கல்யாண சுந்தரம் நகரில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த, அதே பகுதியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த திருச்செல்வம்(45) என்ப வரைப் பிடித்து, அவரிடம் இருந்து ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் மதிப் புள்ள பழைய 500 ரூபாய் நோட்டு களைப் பறிமுதல் செய்தனர். இதேபோல, நேற்று அதிகாலை தஞ்சாவூர் எல்ஐசி காலனியில் வாக்காளர்களுக்கு பணம் விநியோ கம் செய்த திருகாட்டுப்பள்ளியில் வசிக்கும் அதிமுகவைச் சேர்ந்த இளவரசன்(40) என்பவரைப் பிடித்த தேர்தல் பறக்கும் படை யினர், அவரிடம் இருந்து ரூ.50 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்.
திமுகவினர் 2 பேர்
தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் நேற்று காலை வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்ததாக தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் வந்தது. பறக்கும் படையினர் அங்கு சென்றபோது, கீழவாசல் குறிச்சித் தெருவில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த 2 பேரை துணை ராணுவத்தினர் விரட்டிப் பிடித்தனர். பணம் விநியோகம் செய்தவர்களில் மேலும் 2 பேர் பணத்தை அங்கேயே போட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
விசாரணையில், அவர்கள் திமுகவைச் சேர்ந்த பெரம்பலூர் மேட்டுத் தெரு பாலசுப்பிரமணி யன்(40), அரியலூர் மாவட்டம் உடையார் பாளையம் காளிகுறிச்சி யைச் சேர்ந்த சக்கரவர்த்தி(61) என்பது தெரியவந்தது. இருவரி டம் இருந்தும் ரூ.1 லட்சத்து 32 ஆயிரம் பறிமுதல் செய்யப் பட்டது. இருவரும் கைது செய்யப் பட்டனர். தப்பியோடியவர்கள் வீசிச் சென்ற ரூ.1 லட்சத்து 76 ஆயிரத் தையும் பறிமுதல் செய்தனர்.