காலை உணவுத் திட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்பு

காலை உணவுத் திட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் வரவேற்பு
Updated on
1 min read

சென்னை: தமிழக அரசின் காலை உணவு வழங்கும் திட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாநில தலைவர் கு.தியாகராஜன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கும்திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். பின்னர் இத்திட்டம் சத்துணவு திட்டமாகவும் அதை தொடர்ந்து வாரத்தில் 5 நாளும்முட்டை வழங்கும் திட்டமாகவும்விரிவுப்படுத்தப்பட்டது.

காலை உணவை தவிர்க்கக் கூடாது என மருத்துவர்களும், மருத்துவத் துறையும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தொடங்கியுள்ளார். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் என்பதை நன்கு உணர்ந்து பள்ளி மாணவர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டி நடைமுறைப்படுத்தி வருகிறார்.

குறிப்பாக தொழிற்கல்வியில் பயில அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு, அவர்களின் கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றல், கரோனா காலத்தில் பெற்றோரை இழந்த மாணவர்களின் கல்விச் செலவு முழுவதும் அரசேஏற்கும் என்ற அறிவிப்பு, இல்லம் தேடி கல்வி திட்டம், நான் முதல்வன் திட்டம், எண்ணும் எழுத்தும்திட்டம், சிற்பி திட்டம் என நாட்டிலேயே அனைத்து மாநிலங்களுக்கு முன்னோடியாக பல்வேறுதிட்டங்களை வகுத்து அவற்றைநடைமுறைப்படுத்தி வரும்முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே வேளையில் தற்போது நடைமுறையில் உள்ள ஒன்று முதல்பத்தாம் வகுப்பு வரை உள்ளமாணவர்களுக்கு அளிக்கப்பட்டுவரும் சத்துணவு திட்டத்தை 12-ம்வகுப்பு வரை உள்ள அனைத்துமாணவர்களுக்கும் நீட்டிக்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in