Published : 19 Nov 2016 09:43 AM
Last Updated : 19 Nov 2016 09:43 AM

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாசகர்களுக்காக காஞ்சியில் நாளை ‘தி இந்து’ வாசகர் திருவிழா

அண்ணா கலையரங்கில் நடக்கிறது

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாசகர்களுக்கான ‘தி இந்து’ வாசகர் திருவிழா, காஞ்சிபுரம் அண்ணா கலையரங்கில் நாளை நடைபெறுகிறது. இதில் உ.சகாயம் ஐஏஎஸ், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், நடிகர் தம்பி ராமையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.

‘தி இந்து’ தமிழ் நாளிதழ், மக்களின் நன்மதிப்பைப் பெற்று வாசகர்களின் அமோக ஆதரவுடன் 3-ம் ஆண்டை நிறைவு செய்து, 4-ம் ஆண்டில் வெற்றிகரமாக அடியெடுத்து வைத்துள்ளது. இந்த தருணத்தில் இனியதொரு கொண்டாட் டமாக வாசகர் திருவிழா நடத்தப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் முக்கிய நகரங்களில் வாசகர்களின் அமோக ஆதரவுடன் வாசகர் திருவிழா நடத்தப்பட் டது. இந்த ஆண்டில் ஓசூர், புதுக்கோட்டை ஆகிய நகரங்களில் வாசகர் திருவிழா மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட வாசகர்களுக்கான ‘தி இந்து’ வாச கர் திருவிழா, காஞ்சிபுரம் நகராட்சி அலு வலகம் எதிரே உள்ள அண்ணா கலையரங் கில் 20-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

சிறப்பு விருந்தினர்கள்

இந்த விழாவில் ஐஏஎஸ் அதிகாரி உ.சகாயம், வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், திரைப்பட நடிகர் தம்பி ராமையா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசுகிறார்கள்.

விழாவையொட்டி, ‘தி இந்து’ தமிழ் நாளிதழ் குறித்த எண்ணங்களை ‘உங்கள் குரல்’ சேவை வாயிலாக 044-42890002 என்ற எண்ணில் ஏராளமான வாசகர்கள் தொடர்ந்து பதிவு செய்தவண்ணம் உள்ளனர். நீங்களும் உங்கள் கருத்துகள், எண்ணங்கள், கேள்விகளைப் பதிவு செய்யுங்கள். இதில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் கேள்விகளுக்கு விழா மேடையில் பதில் அளிக்கப்படும்.

இந்த விழாவை ‘தி இந்து’வுடன் இணைந்து லலிதா ஜுவல்லரி, சேவல் மார்க் பட்டாசுகள், காஞ்சிபுரம் எஸ்.எம். சில்க்ஸ், செங்கல்பட்டு வித்யாசாகர் கல்விக் குழுமம், ஹோட்டல் ஜெயபாலா இன்டர்நேஷனல் ஆகியவை நடத்துகின்றன.

விழாவுக்கு வரும் வாசகர்கள் ‘தி இந்து’ குழும வெளியீடுகளை எளிதில் வாங்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வாசகர் திருவிழாவுக்கு அனுமதி இலவசம். வாசகர்கள் தங்கள் செல்போனில் இருந்து, VTKAN <ஸ்பேஸ்> பெயர் <ஸ்பேஸ்> வயது <ஸ்பேஸ்> பாலினம் <ஸ்பேஸ்> பின்கோடு ஆகியவற்றை டைப் செய்து 80828 07690 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி உங்கள் வருகையை முன்பதிவு செய்துகொள்ளலாம். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த வாசகர்கள் விழாவில் பங்கேற்று தங்களின் எண்ணங்களைப் பதிவு செய்யலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x