Published : 17 Sep 2022 06:06 AM
Last Updated : 17 Sep 2022 06:06 AM
மதுரை: மதுரையில் பல கோடி ரூபாய் செலவில் தனது மகனின் திருமணத்தை நடத்தியதாகப் பரவும் தகவல் குறித்து அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது:
செப்.9-ம் தேதி நடந்த எனது மகன் திருமணத்தில் ஆடம்பரமோ, அபரிமிதமான செலவோ எதுவும் இல்லை. இதுகுறித்து சிலர் உள் நோக்கத் துடன் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
பந்தல் செலவு எவ்வளவு என அதை அமைத்தவர்களிடமே கேட்கலாம். திமுக தொண்டர்கள், பொதுமக்கள் திரளாகப் பங்கேற்றனர். அவர்கள் சிரமம் இன்றி வந்து செல்லவும், அனைவரும் தாமதமின்றி சாப்பிடும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. தொண்டர் கள் முதல் முக்கிய விருந்தினர்கள் வரை அனைவருக்கும் எவ்விதப் பாகுபாடும் இன்றி ஒரே வகையான உணவு வழங்கப்பட்டது.
பொதுமக்கள் யாருக்கும் எவ் வித சிரமத்தையும் ஏற்படுத்தாத வகையில் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT