

டிஎன்பிஎஸ்சி செயலாளர் எம்.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
குரூப்-2-ஏ நேர்காணல் அல்லாத பணிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு கடந்த ஜனவரி 24-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டது. அதில் தேர்ச்சி பெற்றோருக்கு சான்றிதழ் சரி பார்ப்பு ஜூலை 4 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிலையில், பணி ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் நவம்பர் 21 முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை (நவ.26, 27 நீங்கலாக) நடைபெற உள்ளது. கலந்தாய்வுக்கு அழைக்கப் பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தர வரிசையின்படி கால அட்டவணை பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு கலந் தாய்வு தேதி, நேரம் குறிப் பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையை இணைய தளத்திலிருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பதாரர்களுக்கு தெரி விக்கப்பட்டுள்ளது.
கலந்தாய் வுக்கு அழைக்கப்பட்ட விண்ணப்ப தாரர்கள், மதிப்பெண், தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் நிலவும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப அனு மதிக்கப்படுவர். எனவே, கலந் தாய்வுக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. கலந்தாய்வுக்கு வரத் தவறினால் மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்றார்.