Published : 23 Nov 2016 12:09 PM
Last Updated : 23 Nov 2016 12:09 PM

4-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தேமுதிக: விரக்தியில் மதுரை மாவட்ட தொண்டர்கள்

திருப்பரங்குன்றம் தொகுதியில் தேமுதிக 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் அக்கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் விரக்தி அடைந்துள்ளனர்.

திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி தேர்தலில் வெற்றி பெறுவது திமுக, அதிமுகவுக்கு கவுரவப் பிரச்சினையாக மாறியது. முதல்வர் மருத்துவமனையில் உள்ளதால் அவரில்லாமல் நடக்கும் இந்த தேர்தலில் அதிமுகவுக்கு கட்டாய வெற்றி தேவைப்பட்டது. திமுகவுக்கு இந்த 3 தொகுதிகளில் வெற்றி ஆட்சி மாற்றத்துக்கு அடித்தளமாக அமையும் என அவர்கள் எதிர்பார்த்தனர். திருப் பரங்குன்றம் தொகுதி தேமுதி கவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த தொகுதியாகக் கருதப்படுகிறது. 2005-ம் ஆண்டு இந்த தொகுதிக்குட்பட்ட தனக்கன்குளம் அருகே தான், தேமுதிகவை விஜய காந்த் தொடங்கினார். அதனால், எந்தக் கூட்டணிக்கு சென்றாலும் விஜய காந்த் இந்த தொகுதியைக் கேட்டு வாங்கி போட்டியிட்டு வந்தார்.

இந்நிலையில், நேற்று நடந்த திருப்பரங்குன்றம் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் அதிமுக வென்றது. திமுக இரண்டாம் இடம் பெற்றது. தேமுதிக, பாஜகவை காட்டிலும் குறைந்த வாக்குகள் பெற்று 4-ம் இடத்துக்கு தள்ளப்பட்டது.

தேமுதிக பெரிதும் எதிர்பார்த்த திருப்பரங்குன்றம் தொகுதியில் வெறும் 4,015 வாக்குகளை மட்டுமே பெற்றது. தேமுதிக வேட்பாளர் தனபாண்டியன், சுற்று வாரியாக 114, 110, 253, 226, 181, 252, 242, 164, 325, 242, 215, 138, 244, 182, 190, 222, 138, 165, 117, 181, 204 வாக்குகள் பெற்றார். பாஜக வேட்பாளர் ஸ்ரீனிவாசன், சுற்று வாரியாக 147, 193, 169, 260, 447, 424, 289, 345, 348, 473, 377, 363, 625, 595, 491, 264, 370, 351, 140, 153, 106 வாக்குகள் பெற்றார். தேமுதிக வேட்பாளர் டி.தனபாண்டியன், 3-வது சுற்று, 21-வது சுற்றை தவிர மற்ற அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் பாஜக வேட்பாளர் ஸ்ரீனிவாசனை விட குறைவான வாக்குகளை பெற்றார். இதே தொகுதியில் 2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஏ.கே.டி.ராஜா வென்றார். அதனால், இந்த தோல்வியை தேமுதிகவினரால் ஜீரணிக்க முடி யவில்லை.

அக்கட்சியினர் கூறியதாவது: கட்சிக்கு மதிப்பு, மரியாதை இருந்தபோது ஏராளமானோர் சேர்ந்தனர். கட்சி தோல்வியை சந்திக்கத் தொடங் கியதும் மாற்று கட்சிகளில் இருந்து வந்தவர்கள், பதவியை எதிர்பார்த்து சேர்ந்த வர்கள் வெளியேறினர். விஜயகாந்த் ரசிகர்களும், கட்சியின் மீது விசுவாசுமுள்ள நிர்வாகிகளும், தொண்டர்களும்தான் கட்சியில் உள்ளனர். ஆனால், இவர்களிடையே ஒற்றுமை இல்லை. மாவட்ட நிர்வாகிகள், கீழ்நிலை நிர்வாகிகளை மதிப்பதில்லை. இல்ல நிகழ்ச்சிகளுக்கு அழைத் தாலும் மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொள்வதில்லை.

இதுதொடர்பாக சில மாதங்க ளுக்கு முன், மதுரையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்ளூர் நிர்வாகிகள் மாநில நிர்வாகிகளிடம் புகார் தெரிவித்தனர்.

அதேபோல புறநகர், மாநகர் நிர்வாகிகளுக்கு இடையேயும் ஒருங்கிணைப்பு இல்லை. ஏற்கெனவே, கட்சி மேலிடம் எடுத்த முடிவுகளால் ஒரு பக்கம் சரிவு ஏற்பட்டாலும், மற்றொரு புறம் மாவட்ட நிர்வாகிகளின் செயல்பாடுகள் சரியில்லாமல் போனதால் திருப்பரங்குன்றம் தொகுதியில் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x