இலவச அமரர் ஊர்தி: ஓட்டுநர், மேலாளர் பணிக்கு நவம்பர் 12-ல் நேர்காணல்

இலவச அமரர் ஊர்தி: ஓட்டுநர், மேலாளர் பணிக்கு நவம்பர் 12-ல் நேர்காணல்
Updated on
1 min read

தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவையில் ஓட்டுநர், மேலாளர், தகவல் தொடர்பு அலுவலர் பணிகளுக்கு நேர்முகத் தேர்வு நவம்பர் 12-ம் தேதி நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் பி.மகேஸ்வரி நேற்று வெளியிட்ட ஓர் அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு உதவியுடன் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை இயக்கி வரும் இலவச அமரர் ஊர்திக்கு ஓட்டுநர், மேலாளர், தகவல் தொடர்பு அலு வலர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 12-ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது. கணினி அமைப்பு மேலாளர் பணிக்கு எம்சிஏ அல்லது பிஇ அல்லது பிஎஸ்சி (கம்ப்யூட்டர் சயின்ஸ்) முடித்திருக்க வேண்டும். கணினித்துறையில் 3 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

தகவல் தொடர்பு அலுவலர் பணிக்கு ஏதேனும் ஒரு பட்டம் தேவை. அதோடு தட்டச்சுப் பயிற்சி, தகவல் தொடர்பு பிரிவில் 3 ஆண்டு அனுபவம் வேண்டும். வயது வரம்பு கிடையாது. ஓட்டுநர் பணிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு அல்லது பாட்ஜ் உரிமம் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வேண்டும். வயது வரம்பு 25 முதல் 45 வரை. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி மற்றும் முன் அனு பவச் சான்றுகளுடன் சென்னை எழும்பூர் மாண்டியத் சாலையில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்க தமிழ்நாடு கிளையின் இலவச அமரர் ஊர்தி சேவை திட்ட அலு வலகத்தில் நடக்கும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 95000-54377, 95661-22377 ஆகிய செல்போன் எண்களை தொடர்புகொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in