பாண்டிபஜாரில் நடந்து செல்வோருக்கு உகந்த வசதி: சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்

பாண்டிபஜாரில் நடந்து செல்வோருக்கு உகந்த வசதி: சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம்
Updated on
2 min read

சென்னை பாண்டி பஜாரில் நடந்து செல்வோருக்கு உகந்த வசதியை ஏற்படுத்துவதற்காக சோதனை முறையில் நேற்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டதற்கு பொது மக்கள் ஒத்துழைத்து பாராட்டு தெரிவித்தனர்.

பாண்டி பஜாரில் பல்வேறு பிரபல வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் பொருட்கள் வாங்க தினமும் பல்லாயிரக்கணக்கானோர் வந்து செல்வதால், அந்த சாலையில் வாகனங்களும் அதிக அளவில் நிறுத்தப்படுகின்றன. இதனால் அந்த சாலை போக்குவரத்து நெரி சல் மிகுந்த சாலையாக இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்த சாலையில் பொதுமக்கள் எந்தவித போக்கு வரத்து இடையூறும் இன்றி, நடந்து சென்று பொருட்களை வாங்க, மோட்டார் வாகனமில்லா போக்கு வரத்து மற்றும் நடந்து சென்று பொருட்களை வாங்குவதை ஊக்குவிக்க அங்கு நடைபாதை களை மேம்படுத்தி, நடைபாதை வளாகம் ஏற்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் உருவாக்கி யது. அப்பணி, சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது.

இதை சோதனை முறையில் செயல்படுத்தி, அதில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு, பின்னர் முழுமையாக செயல் படுத்த மாநகராட்சி திட்டமிட்டிருந்தது. அதற்காக அத்திட்டம் சோதனை அடிப்படையில் நேற்று பாண்டி பஜாரில் 700 மீட்டர் நீள சாலையில், காலை 9 முதல் பிற்பகல் 12.30 வரை செயல்படுத்தப்பட்டது.

இதில் இரு சாலைகளிலும் நடுவே தடுப்பு ஏற்படுத்தி பாதி சாலையில் பேருந்து மற்றும் இரு சக்கர வாகன போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. மீதம் உள்ள சாலையில் பொதுமக்கள் நடந்து செல்ல வழிவகை செய்யப்பட்டது. அதில் பொதுமக்களை மகிழ்விக் கும் வகையில் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், பறை இசை, டிரம்ஸ் இசை, நடன நிகழ்ச்சிகள், மருத்துவ பரிசோதனை, பாரம்பரிய சத்துணவு கண்காட்சி ஆகியவை இடம்பெற்றிருந்தன. கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன. பொருட்களை வாங்க வந்தவர் களுக்கு மாற்று இடத்தில் வாகன நிறுத்த வசதியை மாநகராட்சி ஏற்படுத்தி கொடுத்திருந்தது. வாகன நிறுத்திமிடத்திலிருந்து முதியோர், மாற்றுத்திறனாளிகள் கடைகளுக்கு செல்ல ஏதுவாக, பேட்டரி கார்களும் நிறுத்தப்பட்டிருந்தன.

இதை, மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயன், தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் அடிப்படை வசதி மேம்பாட்டு கழக தலைவர் டேவிதார், தமிழ்நாடு நகர்ப்புற உட்கட்டமைப்பு நிதி சேவைகள் நிறுவன மேலாண் இயக்குநர் காகர்லா உஷா, மாநக ராட்சி துணை ஆணையர்கள் கே.எஸ்.கந்தசாமி, கோவிந்தராவ், சுபோத்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

அங்கு பொருட்களை வாங்க நடந்து வந்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சேகர்-சரஸ்வதி தம்பதியர் கூறும்போது, வாகனத்தை அனு மதிக்காதபோது, மாநகராட்சி மீது கோபம் இருந்தது. இங்கு சாலை யில் வந்து பார்த்தபோது, வாக னங்கள் இல்லாமல் காலியாக இருந்தது மகிழ்ச்சியை ஏற்படுத்தி யது. நகர வாழ்க்கையில் நடக் கவே வாய்ப்பில்லாத சூழலில், நடக்க வாய்ப்பளித்த மாநகராட் சிக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றனர்.

வணிகர்கள் எதிர்ப்பு

அப்போது அங்கு திரண்ட பாண்டிபஜார் வியாபாரிகள், ஏற்கெனவே சில்லறை நோட்டுகள் தட்டுப்பாட்டால், வியாபாரம் பாதிக் கப்பட்டுள்ள நிலையில், இங்கு வாகனம் நிறுத்த மாநகராட்சி அனுமதி மறுத்தால், எங்க ளுக்கு வியாபாரம் மேலும் பாதிக் கும். மாநகராட்சியின் இந்த முடிவு, வணிகர்களிடம் கலந்தா லோசிக்காமல் எடுக்கப்பட்டுள்ளது என்று குற்றம்சாட்டினர். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, பிற்பகல் 12.30 மணிக்கு பிறகே வணிகர்கள் கடைகளை திறந்தனர்.

நடைபாதை வியாபாரிகள் ஆதரவு

பாண்டிபஜாரில் மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டுள்ள நடை பாதை வியாபாரிகள் வணிக வளாகத்தில் கடை வைத்திருக்கும் நடைபாதை வியாபாரிகள், ஆணை யர் தா.கார்த்திகேயனை சந்தித்து, இத்திட்டத்துக்கு ஆதரவு தெரிவித் தனர். மேலும், பொதுமக்கள் நடந்து சென்றால், எங்கள் கடைகளில் வியாபாரம் அதிகரிக்கும் என்றும் தெரிவித்தனர்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் தா.கார்த்திகேயனிடம் கேட்டபோது, இன்று சோதனை முறையில் போக்குவரத்து மாற்றப் படும் என்று அனைத்து வணிகர் களுக்கும் நேற்றே தெரிவித்துவிட் டோம். இத்திட்டத்தால் எந்த வகையிலும் வர்த்தகம் பாதிக்காது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in