நெருங்கும் பண்டிகைகள் | பால்கோவா, மைசூர் பா உள்ளிட்ட இனிப்புகள் விலையை உயர்த்தி ஆவின் உத்தரவு

நெருங்கும் பண்டிகைகள் | பால்கோவா, மைசூர் பா உள்ளிட்ட இனிப்புகள் விலையை உயர்த்தி ஆவின் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கும் நிலையில் பால்கோவா, மைசூர் பா உள்ளிட்ட இனிப்புகளின் விலையை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது.

பால் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி விரி விதிப்பு காரணமாக ஆவின் தயிர், மோர், லஸ்ஸி, நெய் ஆகிய பொருட்களின் விலை கடந்த ஜூலை மாதம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் குலாப்ஜாமூன், ரசகுல்லா உள்ளிட்ட இனிப்புகளின் விலை உயர்த்தி ஆவின் உத்தரவிட்டுள்ளது. இதன் முழு விவரம்:

  • 125 கிராம் குலாப்ஜாமூன் ரூ.45 லிருந்து ரூ.50 ஆக உயர்வு
  • 250 கிராம் குலாப்ஜாமூன் ரூ.80 லிருந்து ரூ.100 ஆக உயர்வு
  • 100 கிராம் ரசகுல்லா ரூ.40 லிருந்து ரூ.45 ஆக உயர்வு
  • 200 கிராம் ரசுகுல்லா ரூ.80 லிருந்து ரூ.90 ஆக உயர்வு
  • 500 கிராம் பால் கோவா ரூ.210 லிருந்து ரூ.250 ஆக உயர்வு
  • 100 கிராம் பால் கோவா ரூ.45 லிருந்து ரூ.50 ஆக உயர்வு
  • 250 கிராம் பால் கோவா ரூ.110 லிருந்து ரூ.130 ஆக உயர்வு
  • 1 கிலோ சர்க்கரை இல்லாத கோவா ரூ.520 லிருந்து ரூ.600 ஆக உயர்வு
  • 500 கிராம் சர்க்கரை இல்லாத கோவா ரூ.260 லிருந்து ரூ.300 ஆக உயர்வு
  • 100 கிராம் மில்க் பேடா ரூ.47 லிருந்து ரூ.55 ஆக உயர்வு
  • 250 கிராம் மில்க் பேடா ரூ.110 லிருந்து ரூ.130 ஆக உயர்வு
  • 500 கிராம் மைசூர்பா ரூ.230 லிருந்து ரூ.270 ஆக உயர்வு
  • 250 கிராம் மைசூர்பா ரூ.120 லிருந்து ரூ.140 ஆக உயர்வு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in