Published : 14 Nov 2016 09:14 AM
Last Updated : 14 Nov 2016 09:14 AM

வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க நடவடிக்கை இல்லை: சுதாகர் ரெட்டி குற்றச்சாட்டு

வெளிநாடுகளில் உள்ள கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் சுதாகர் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த சுதாகர் ரெட்டி கூறிய தாவது:

கறுப்பு பணத்தை ஒழிப்பதற் காக 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்துள்ளார். இப் போது பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்று வதற்காக வங்கிகள், ஏடிஎம்கள், அஞ்சலகங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக காத்துக்கிடக்கின்றனர். இதற்கான உரிய முன்னேற்பாடு களை செய்யாமல் இந்த நடவடிக் கையை எடுத்துள்ளது கண்டிக்கத் தக்கது.

மேலும், வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் செலுத்தப்படும் என்று தேர்தலின் போது கூறிதான் மோடி பிரதமர் ஆனார். இப்போது அதை செயல்படுத்த முடியவில்லை என்பதற்காக கருப்பு பணம் ஒழிப்பு என்று கூறி, 500 1,000 ரூபாய் நோட்டுகளுக்கு தடை என்று நாடகம் ஆடுகிறார்கள். இதனால் ஏழை, எளிய மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை பனாமா லீக்ஸ் வெளியிட்டது. அதன் மீது மத்திய பாஜக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. தற்போது வெளியாகி யுள்ள புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளில் தேவநாகரி எழுத்துகளை திணித்துள்ளனர்.

மேலும், மக்களவைத் தேர்த லுக்குப் பின்பு நடந்த டெல்லி, பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் களில் பாஜக தோல்வியடைந்தது. இந்நிலையில், மக்களவை தேர்த லோடு சட்டப்பேரவைத் தேர்தலை யும் சேர்த்து நடத்த வேண்டும் என்று பாஜக கூறுவது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிரானது.

இவ்வாறு சுதாகர் ரெட்டி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x