Published : 16 Sep 2022 04:15 AM
Last Updated : 16 Sep 2022 04:15 AM

கோவை | திமுக எம்பி ஆ.ராசா மீது காவல் ஆணையரிடம் பாஜகவினர் புகார்

திமுக எம்பி ஆ.ராசா | கோப்புப் படம்

கோவை

பாரதிய ஜனதா கட்சியின் மாநில விவசாய அணி தலைவர் ஜி.கே.நாகராஜ், கோவை மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் தலைமையில் பாஜக நிர்வாகிகள் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று வந்தனர்.

காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணனை சந்தித்து புகார் மனு அளித்தனர். அதில்,‘‘கடந்த 5-ம் தேதி ஒரு திருமண விழாவில் கலந்து கொண்ட திமுகவை சேர்ந்த நீலகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஆ.ராசா இந்து மதத்தை சேர்ந்தவர்கள் பற்றி அவதூறாக பேசியுள்ளார்.

அவரது பேச்சினால், இந்துக்கள் அனைவரும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். மத துவேஷ கருத்துகளை பேசிய ஆ.ராசா மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனக் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x