

இந்திய, இலங்கை மீனவர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண் பதற்காக டெல்லியில் இரு நாடு களின் அமைச்சர்களிடையே இன்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக இந்திய, இலங்கை மீனவர்கள் இடையே 30 ஆண்டு களுக்கும் மேலாக பிரச்சினை நீடித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் தமிழக- இலங்கை மீனவப் பிரதி நிதிகளுக்கு இடையே டெல்லியில் கடந்த 2-ம் தேதி பேச்சுவார்த்தை நடைபெற் றது.
இப்பேச்சுவார்த்தையில் எல்லை தாண்டி மீன் பிடிக்கும் போது ஏற்படும் சிக்கல்கள், மீன்பிடி படகுகளை உபயோகிக்கும் முறை, கச்சத்தீவு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்டோர் பங் கேற்கும் பேச்சுவார்த்தை டெல்லி யில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் கடந்த 2-ம் தேதி இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகளால் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் தொடர்பான முடிவு கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பேச்சுவார்த்தையை முன்னிட்டு ராமேசுவரம் விசைப்படகு மீனவர் கள் இன்று கடலுக்குச் செல்ல வில்லை என அறிவித்துள்ளனர்.