54 ஆண்டுகளாக வயிற்றில் கை, கால்களுடன் அதிசய மனிதர்: மருத்துவ சிகிச்சை கோரி ஆட்சியரிடம் மனு

54 ஆண்டுகளாக வயிற்றில் கை, கால்களுடன் அதிசய மனிதர்: மருத்துவ சிகிச்சை கோரி ஆட்சியரிடம் மனு
Updated on
1 min read

54 ஆண்டுகளாக வயிற்றில் வளர்ந் துள்ள கை, கால்களை அகற்றி உயிர் கொடுங்கள் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கூலித் தொழிலாளியால் பரபரப்பு ஏற்பட்டது.

வேலூர் மாவட்ட ஆட்சியர் ஆட்சியர் ஆர்.நந்தகோபால் தலைமையில் நடந்த மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் திங்களன்று வித்தியாசமான நிகழ்வு நடந்தது.

குடியாத்தம் செதுக்கரை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி விநாயகம் (54) என்பவரும் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தார். அவர் வயிற்றில் இரண்டு கை, கால்கள் வளர்ந்துள்ளன. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

54 ஆண்டு வேதனை குறித்து விநாயகம் கூறும்போது, நான் பிறக்கும்போதே வயிற்றில் இரண்டு கை, கால்கள் இருந்தன. இந்த கை, கால்களை சுமந்துகொண்டு வெளியிடங்களுக்கு வேலைக்கு செல்ல முடியவில்லை. இதற்கிடையே எனக்கு திருமணமாகி, கலைச்செல்வி, அமுதவள்ளி என இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளாக எனது வயிற்றில் ஒட்டியிருக்கும் கை, கால்களை சுமக்க முடியாமல் அவதிப்படுகிறேன். என் உயிருக்கு ஆபத்து இல்லாமல் வயிற்றில் வளர்ந்துள்ள கை, கால்களை அகற்ற அரசு உதவ வேண்டும்’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in