பிரதமர் மோடியின் அறிவிப்பு தோல்வியடைந்துவிட்டது: தா.பாண்டியன் குற்றச்சாட்டு

பிரதமர் மோடியின் அறிவிப்பு தோல்வியடைந்துவிட்டது: தா.பாண்டியன் குற்றச்சாட்டு
Updated on
1 min read

500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு நீக்கப்பட்டது குறித்து, பிரதமர் மோடியின் அறிவிப்பு தோல்வியடைந்துவிட்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

500, 1000 ரூபாய் நோட்டுகள் பண மதிப்பு நீக்க அறிவிப்பை கண்டித்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் நாகை தலைமை அஞ்சல் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பங் கேற்ற தா.பாண்டியன் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

மிகவும் பாதிப்பு

500, 1000 ரூபாய் நோட்டுகளின் பண மதிப்பு நீக்கம் தொடர்பாக பிரதமர் மோடியின் அறிவிப்பால், ஏழை, எளிய மக்கள் மிகவும் பாதிக் கப்பட்டுள்ளனர். செல்லத்தக்க 50, 100 ரூபாய் நோட்டுகளும் கிடைக்கப்பெறவில்லை.

எந்தவித திட்டமிடலும், முன் தயாரிப்பும் இல்லாமல், இந்த துறையில் அனுபவமுள்ளவர் களை ஆலோசிக்காமல் மோடி இந்த அறிவிப்பை செய்திருக் கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக நாடாளுமன்றத்தில் கலந்தாலோ சித்து ஒப்புதல் பெறாமல், இந்த நடவடிக்கைகளை மோடி எடுத்துள்ளார்.

இதுவரை எவ்வித கறுப்புப் பணமும் பிடிபட்டதாக பிரதமர் அறிவிக்கவில்லை. பண மதிப்பு நீக்கம் குறித்த அவரது அறிவிப்பு தோல்வியடைந்துவிட்டது. நாள் தோறும் ஒவ்வொரு அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆனால், அறிவிப்புக்கும் நடைமுறைக்கும் சம்பந்தமில்லை. உச்ச நீதிமன்றமே இந்தியாவில் கலவரம் ஏற்படும் ஆபத்து உள்ளதாக கூறியுள்ளது. சில்லறை ரூபாய் நோட்டுகளை போதுமான அளவில் எல்லா இடங் களிலும் கிடைக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் தா.பாண்டியன் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in