Published : 25 Nov 2016 08:11 AM
Last Updated : 25 Nov 2016 08:11 AM

உயிருக்கு பயந்துதான் மதன் தலைமறைவாக வாழ்ந்தார்: செய்தியாளர்களிடம் தாயார் தகவல்

உயிருக்கு பயந்துதான் மதன் தலை மறைவாக வாழ்ந்தார் என்று அவரது தாயார் தங்கம் தெரிவித்துள்ளார்.

மதனின் தாயார் தங்கம் சென்னை யில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

மாணவர்களிடம் பணம் வாங்கி கல்லூரிகளில் சேர்த்துவிடுவது தான் மதனின் வேலை. இப்படி நன்கொடை வசூலிக்க மதனுக்கு ஊக்கம் அளித்தவர் எஸ்.ஆர்.எம். தலைவர் பச்சமுத்து. எனது மகன் செய்தது தப்பு என்றால், இதில் முதல் குற்றவாளி பச்சமுத்துதான். கல்வியை வியாபாரம் ஆக்கியது தவறுதான். மதன் செய்ததை நான் நியாயப்படுத்தவில்லை.

கல்லூரி நிர்வாகத்தில் பச்ச முத்துவுக்கும், அவரது மகன் ரவி பச்சமுத்துவுக்கும் பிரச்சினை ஏற்பட்டது. இதில் என் மகனை பலிகடா ஆக்குகிறார்கள். இந்த பிரச்சினையால் உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பயத்தில்தான் மதன் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார்.

முதல் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு மதன் பிரிந்து விட்டார். பின்னர் இரண்டாவதாக அவர் திருமணம் செய்து கொண் டார். மதனுக்கு வேறு மனைவியர் கிடையாது. வயதான பெற்றோரை யும், மனைவி மற்றும் குழந்தைகளை யும் காப்பாற்றவே மதன் பாடுபட் டார். முறைகேடாகவோ, சட்டத்துக்கு புறம்பாகவோ மதன் எதையும் செய்யவில்லை" என்று கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x