

சென்னை: திமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தந்தை பெரியாரின் 144-வதுபிறந்த நாளை முன்னிட்டு செப்.17-ம் தேதி (நாளை) காலை 8.30மணிக்கு அண்ணா சாலை சிம்சன் அருகில் உள்ள அவரதுசிலைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர்.
பெரியாரின் ஒவ்வொருபிறந்தநாளும் சமூகநீதி நாளாக கடைபிடிக்கப்படும் என்றும், அன்று சமூகநீதி நாள்உறுதிமொழி ஏற்க வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு செப்.6-ம்தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.
அதன்படி, நாளை காலை 10.30 மணிக்கு சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளின் முன்பு, முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைப்புச் செயலாளர் ஆர் எஸ்.பாரதி தலைமையில், சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்ச்சியில், சென்னையைச் சேர்ந்த மாவட்டம், பகுதி, வட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க வேண்டும்.