Published : 15 Sep 2022 08:02 PM
Last Updated : 15 Sep 2022 08:02 PM

சென்னையில் சற்றே அதிகரிக்கும் கரோனா: கட்டாயம் மாஸ்க் அணிய மாநகராட்சி அறிவுறுத்தல் 

சென்னை: சென்னையில் கரோனா தொற்று சற்று அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநகராட்சியின் சார்பில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள், வார இறுதி நாட்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை 1,10,34,921 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 97.69% பேர் முதல் தவணை தடுப்பூசியும், 86.62% பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர். தற்போது வரை 6,02,998 முன்னெச்செரிக்கை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், சென்னையில் கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. ஆனால் நேற்று (செப்.14) தொற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. எனவே, வரும் பண்டிகை காலங்கள் கரோனா தொற்று பரவாமல் தடுக்க மக்கள் பொது இடங்களில் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்றும், தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x