தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு

தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழகம் நோக்கி வீசும் மேற்குதிசைக் காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக 15, 16, 17, 18-ம் தேதிகளில் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in