தனுஷ்கோடி - தலைமன்னார் பாலம் அமைக்க இந்தியா தயார்: பொன். ராதாகிருஷ்ணன் தகவல்

தனுஷ்கோடி - தலைமன்னார் பாலம் அமைக்க இந்தியா தயார்: பொன். ராதாகிருஷ்ணன் தகவல்
Updated on
1 min read

தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே பாலம் கட்டுவதற்கு இந்தியா தயாராக உள்ளது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ராமேசுவரம் முகுந்தரா யர் சத்திரத்தில் இருந்து தனுஷ் கோடி அரிச்சல்முனை வரை புதிதாக அமைக்கப்பட்டுள்ள சாலை திறக்கப்படாத நிலையில், கடல் அரிப்பால் சேதம் அடைந்துள்ளது. இதை மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நேற்று பார் வையிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தனுஷ் கோடி - தலைமன்னார் இடையே பாலம் கட்டுவதற்கு இந்தியா தயாரா கவே உள்ளது.

இலங்கை அரசு ஒப்புக் கொண்டால் பாரதி கண்ட கனவு நினைவேறும். டெல்லி யில் நடைபெற்ற மீனவப் பேச்சுவார்த்தையில் தமிழக, இலங்கை மீனவர்கள் இடையிலான பிரச்சினையை பேசி தீர்த்துக்கொள்வதற்காக கூட்டுப் பணிக் குழு அமைக் கப்படும்.

இதில் இரு நாட்டு மீன்வளத் துறை அதிகாரிகள் குழு 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடி பிரச்சினைகளை ஆராயும்.

இரு நாட்டு அமைச்சர்கள் தரப்பிலான கூட்டம் 6 மாதங் களுக்கு ஒருமுறை நடத்தப்படும். அதன்படி இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் இடையிலான முதல் கூட்டம் வரும் ஜனவரி 2-ம் தேதி கொழும்பில் நடைபெற உள்ளது என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in