மின் விபத்தை தடுக்க பாதுகாப்பு அம்சங்கள்: மின்வாரியம் அறிவுறுத்தல்

மின் விபத்தை தடுக்க பாதுகாப்பு அம்சங்கள்: மின்வாரியம் அறிவுறுத்தல்
Updated on
1 min read

மழைக் காலத்தில் மின் விபத்தைத் தடுக்கும் வகையில் 5 பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்கும்படி தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை எடுக்க அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்களுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பராமரிப்பு பணிகள்

துணைமின் நிலையங் களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மின் விநியோகப் பிரிவுகளில் மின்மாற்றி களின் பராமரிப்பு, மரக்கிளை களை வெட்டுதல், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றுதல், தொய்வடைந்த மின்கம்பிகளை சரி செய்தல், புதைவடங்கள் (கேபிள்) பராமரிப்பு ஆகிய பணி கள் மேற்கொள்ளப்பட்டு வரு கின்றன.

மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மின்சார பில்லர் பெட்டிகளில் தண்ணீர் புகுவதைத் தடுப்பதற்கு மின்சார பில்லர் பெட்டிகள் உயர்த்தப்பட்டுள்ளன.

சிறப்பு குழுக்கள்

தமிழகம் முழுவதும் பகுதி வாரியாக சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மிகவும் தாழ்வான மின் கம்பிகள், சாய்ந்த, உடைந்த, பழுதடைந்த மின்கம்பங்கள், பழுதடைந்த தெருவிளக்கு மின் இணைப்புப் பெட்டிகள், சேதமடைந்துள்ள புதைவட மின்கம்பிகள் ஆகிய வற்றை ஆய்வு செய்து, மறு சீரமைப்பு செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் வகையில், நடைபெறும் சீரமைப் புப் பணிகளை ஆய்வு செய்ய தலைமையகத்தில் சிறப்புக் குழுக் கள் உருவாக்கப்பட்டுள்ளன.

மேலும், பின்வரும் 5 பாது காப்பு அம்சங்களை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும். பொது மக்கள் மின்கம்பிகளில் ஈரமான துணிகளை உலர்த்தக்கூடாது. மின்கம்பங்கள் மற்றும் அவற்றைத் தாங்கும் மின்கம்பிகளை தொடக் கூடாது. மின்கம்பத்திலோ அவற் றைத் தாங்கும் கம்பிகளிலோ கால்நடைகளை கட்ட வேண்டாம். மின்சார பில்லர் பெட்டிகள் மற்றும் மின்மாற்றி அமைப்புகள் ஆகியவற்றுக்கு அருகே செல்ல வேண்டாம்.

அறுந்து கிடக்கும் கம்பிக ளையோ, புதைவடங்களையோ தொட வேண்டாம் எனவும், அவ்வாறு ஏதேனும் கண்டறியப் பட்டால், உடனடியாக அருகில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக அலு வலகத்துக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மின்கம்பிகளில் ஈரமான துணிகளை உலர்த்தக்கூடாது. மின்கம்பங்கள் மற்றும் அவற்றைத் தாங்கும் மின்கம்பிகளை தொடக் கூடாது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in