Published : 15 Nov 2016 09:43 AM
Last Updated : 15 Nov 2016 09:43 AM

நடவடிக்கை எடுக்க இயலாத தேர்தல் ஆணையம் எதற்கு?- ராமதாஸ் கேள்வி

சோளக்காட்டு பொம்மை போல சும்மா இருக்கும் தேர்தல் ஆணையம் நமக்குத் தேவையில்லை என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதி பாமக வேட்பாளர் கே.குஞ்சிதபாதத்தை ஆதரித்து, நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற பிரச்சார பொதுக்கூட்டத்தில் அவர் பேசியது:

இங்கு நடக்கும் தேர்தல் வித்தியாசமானது. 232 தொகுதிகளில் தேர்தல் நடந்தபோது, இந்த 2 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கவில்லை. பணப் பட்டுவாடா காரணமாக தேர்தலை தள்ளி வைத்தது தேர்தல் ஆணையம். ஆனால், மீண்டும் அதே வேட்பாளர்கள் போட்டியிடு கின்றனர். இப்போதும் வீடுவீடாகப் பணம் கொடுத்து வருகின்றனர். சிலர் கையும்களவுமாக பிடிபட்டுள்ளனர். பணம் கொடுப்பவர்களைப் பிடித்து அவர்கள் மீது வழக்குப் போட்டு தண்டனை பெற்றுத் தர தேர்தல் ஆணை யத்துக்கு அதிகாரம் இல்லையாம். அப்படி யென்றால், தேர்தல் ஆணையம் என்ன செய் கிறது?. சோளக் காட்டில் பொம்மை வைத்திருப் பார்கள். அதைப் பார்த்து குருவி, காகம் போன்ற பறவைகள் பயந்து ஓடும். அந்த அளவுக்குக் கூட இந்த தேர்தல் ஆணையத்தைக் கண்டு யாரும் பயப்பட வில்லை. அப்படிப்பட்ட தேர்தல் ஆணையம் எதற்கு?

நல்ல அரசைத் தேர்வு செய்யும் பலம் பெண் கள் கையில்தான் உள்ளது. மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். இலவசங்களை காட்டி ஏமாற்றியவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x