இடை நீக்கத்தை எதிர்த்து விஷால் வழக்கு

இடை நீக்கத்தை எதிர்த்து விஷால் வழக்கு
Updated on
1 min read

தயாரிப்பாளர் சங்கத்தின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்து நடிகர் விஷால் ஊட கங்களுக்கு பேட்டியளித்ததை யடுத்து அவரை தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து இடைநீக்கம் செய்து கடந்த நவம்பர் 14-ம் தேதி உத்தரவிட்டனர்.

இதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘‘நான் கடந்த 2013 முதல் பட தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறேன். என் மீது வீண் பழி சுமத்தி வேண்டு மென்றே தயாரிப்பாளர் சங்க நிர் வாகிகள், சட்ட விரோதமாக என்னை இடைநீக்கம் செய்துள்ள னர். எனவே அந்த இடைநீக்க உத் தரவை ரத்து செய்ய வேண்டும்.

ஏற்கெனவே நடிகர் சங்கத் தேர்தலில் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். அப்போது தயாரிப்பாளர் சங்கத் தலைவராக இருந்த எஸ்.தாணு, எனக்கு எதிராக போட்டியிட்ட ராதாரவி அணிக்கு வெளிப்படை யாக ஆதரவு தெரிவித்தார். அப்போது ஏற்பட்ட முன்பகை காரணமாக இப்போது என்னை இடைநீக்கம் செய்துள்ளனர்.

மேலும் நான் தெரிவித்த அதே கருத்தைதான் நடிகர் கருணாஸும் தெரிவித்துள்ளார். அவரும் தயாரிப்பாளர் சங்கத் தில் உறுப்பினராக உள்ளார். இதில் என் மீது மட்டும் உள்நோக்கத்துடன் நடவடிக்கை எடுத்துள்ளனர். எனவே இடை நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என அதில் கோரியிருந்தார்.

இந்த மனு நேற்று நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் முன்பு விசா ரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, விஷாலின் மனுவிற்கு வரும் டிசம்பர் 6-ம் தேதிக்குள் பதிலளிக்க தயாரிப்பாளர் சங்கத்திற்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in