

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பது தேமுதிகவுக்கு சாதகமா அல்லது பாதகமா என்பது குறித்து ஆய்வு நடத்த கட்சி நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார்.
தேமுதிக உயர்நிலைக் குழுக் கூட்டம், சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சித் தலைமை அலு வலகத்தில் புதன்கிழமை நடந்தது. கூட்டத்துக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமை தாங்கினார். மாநில இளைஞர் அணிச் செயலாளர் எல்.கே.சுதீஷ், கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி மற்றும் உயர்நிலைக் குழு உறுப்பினர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், மக்களவைத் தேர்த லில் போட்டியிட்ட தேமுதிக வேட்பா ளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
மக்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு ஏற்பட்ட தோல்விக் கான காரணங்கள், கூட்டணிக் கட்சிகள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. கட்சியை வலுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நிர்வாகிகளிடம் கருத்து கேட்கப்பட்டது. தேமுதிக சார்பில் போட்டியிட்ட 14 வேட்பாளர் களிடமும் மாவட்டச் செயலாளர் களிடமும் விஜயகாந்த் தனித்தனி யாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக நிர்வாகிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மாவட்டச் செயலாளர்களின் பணி சிறப்பாக இல்லை என்று கட்சித் தலைவர் விஜயகாந்த் கருது கிறார். இதை அவர் மாவட்டச் செயலாளர்களிடமே கூறி, எச்சரித்தார். வரும் காலங்களில் ஆக்கபூர்வமான பணிகளை மேற் கொண்டு கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 6 கட்சிகள் இடம் பெற்று போட்டி யிட்டன. இதில் பெரும் பங்கு வகித்தது தேமுதிகதான். இந்தக் கூட்டணி தேமுதிகவுக்கு சாதக மாக இருக்குமா அல்லது பாதகமாக இருக்குமா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும் நிர்வாகிகளுக்கு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் பல்வேறு முக்கிய முடிவுகளை அவர் எடுப் பார் என்று எதிர்பார்க்கிறோம்.
அதே நேரத்தில் தற்போதுள்ள கூட்டணியே 2016 சட்டசபைத் தேர்தலிலும் தொடரவும் வாய்ப் புள்ளது. மாவட்ட நிர்வாகங்களை பலப்படுத்தும் வகையில் விரைவில் மாவட்டச் செயலாளர்களின் தனி கூட்டத்தையும் விஜயகாந்த் நடத்தவுள்ளார்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.