Published : 14 Sep 2022 03:58 PM
Last Updated : 14 Sep 2022 03:58 PM

உணவு வகை முதல் நிதி ஒதுக்கீடு வரை: காலை உணவுத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள் 

பிரதிநிதித்துவப் படம்

சென்னை: முதல்வரின் காலை உணவுத் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (15-ம் தேதி ) மதுரையில் தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் முதல் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி மற்றும் தொலைதூர கிராமங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை மதுரையில் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்த பிறகு 16-ம் தேதி அமைச்சர்கள் அவர்களின் மாவட்டங்களில் தொடங்கி வைக்கவுள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் உள்ளாட்சிப் பிரநிதிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். இதற்கு முன்பாக இந்த திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கடந்த 12-ம் தேதி பள்ளி மேலாண்மை குழுவில் விவாதிக்கப்பட்டது.

எவ்வளவு கிராம் (ஒரு குழந்தைக்கு)

  • மூலப் பொருட்களின் அளவு 50 கிராம்
  • பருப்பு 15 கிராம்
  • சமைத்தபின் உணவு அளவு 150 முதல் 200 கிராம்
  • சாம்பார் அளவு 60 கிராம்
  • கிச்சடி அளவு 100 கிராம்
  • சேகரி அளவு 60 கிராம்

உணவு வகைகள்

  • திங்கள் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்.
  • செவ்வாய் - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி.
  • புதன் - வெண் பொங்கல், ரவா பொங்கல் + காய்கறி சாம்பார்.
  • வியாழன் - அரிசி உப்புமா, ரவா உப்புமா, சேமியா உப்புமா, கோதுமை ரவா உப்புமா + காய்கறி சாம்பார்
  • வெள்ளி - ரவா கிச்சடி, சேமியா கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா கிச்சடி + ரவா கேசரி, சேமியா கேசரி.
  • வாரத்தில் குறைந்தது 2 நாட்கள் உள்ளூர் சிறுதானியங்களைக் கொண்டு காலை சிற்றுண்டி.

எந்த நேரம்?

  • 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி திட்டம் முதல் கட்டமாக செயல்படுத்தபடவுள்ளது.
  • இந்த 1,545 பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவ, மாணவியர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படவுள்ளது.
  • இந்தத் திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தினசரி காலை 8.15 மணி முத்ல் 8.50 மணிக்குள் காலை உணவு வழங்க வேண்டும்.
  • உள்ளூர் சமையல் எண்ணெய் மற்றும் காய்கறிகளை பயன்படுத்த வேண்டும்
  • பள்ளி மேலாண்மை குழு தினசரி உணவை ருசி பார்க்க வேண்டும்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x