மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற போலி குறுந்தகவலை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்: மின் துறை அறிவுறுத்தல்

மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்ற போலி குறுந்தகவலை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம்: மின் துறை அறிவுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: மின்வாரியம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: அண்மைக்காலமாக மின்நுகர்வோர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி வருகிறது.

அதில், "உங்களது முந்தைய மாத பில்லுக்கான கட்டணம் செலுத்தப்படாததால் இன்று இரவுக்குள் உங்களது வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படும். எனவே, உடனடியாக மின் வாரிய அதிகாரியை தொடர்புகொள்ளவும். அல்லது பில் கட்டணம் செலுத்திய விவரத்தைகீழ்கண்ட வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கவும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இத்தகவல் முற்றிலும் போலியானது. மின்வாரியத்தைப் பொறுத்தவரை இது போன்றதகவல்களை தனது நுகர்வோருக்கு அனுப்புவது கிடையாது.

எனவே, நுகர்வோர்களுக்கு இதுபோன்ற தகவல்கள் வந்தால் அதை நம்பி அதற்கு பதில் அளிக்கவேண்டாம். மேலும், நுகர்வோர் தங்களது மின்கட்டணத்தை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வழக்கமாக மின்வாரிய அலுவலகத்திலோ நேரில் வந்து செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in