மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் - செங்கல்பட்டில் செப். 16-ம் தேதி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்

மின் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக சார்பில் - செங்கல்பட்டில் செப். 16-ம் தேதி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சென்னை: மின் கட்டண உயர்வைக் கண்டித்துஅதிமுக சார்பில்வரும் 16-ம் தேதிசெங்கல்பட்டில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் பழனிசாமி பங்கேற்கிறார்.

இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை பெரும் துன்பத்துக்கு ஆளாக்கியுள்ள திமுக அரசைக் கண்டித்தும், அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணஉயர்வை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், அதிமுக சார்பில் கட்சி அமைப்பு ரீதியான அனைத்து மாவட்டங்களிலும் 16-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.

செங்கல்பட்டில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையேற்க உள்ளார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கான ஏற்பாடுகளை, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், கிழக்கு மாவட்ட செயலாளர் திருக்கழுகுன்றம் ஆறுமுகம் ஆகியோர் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி சார்பு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in