

வங்கிகள் முன்பு போராட்டம் நடத்திய 70 பேர் கைது செய்யப் பட்டனர்.
சென்னை பாரிமுனை என்.எஸ்.சி.போஸ் சாலையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் வர்த்தக கிளையை அகில இந்திய மாணவர் கழகம், புரட்சிகர இளை ஞர் கழகம், ஜனநாயக வழக்கறி ஞர் சங்கம் ஆகிய அமைப்பினர் நேற்று காலையில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
விஜய் மல்லையா வாங்கிய 1000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்த ஸ்டேட் வங்கி, கல்விக் கடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். 500, 1000 ரூபாய் விவகாரத்தில் மத்திய அரசின் முடிவுகள் தவறானது என்று அவர்கள் கோஷமிட்டனர். அப்போது சிலர் பாட்டில் மற்றும் கற்களை கொண்டு வங்கி கட்டிடத்தை தாக்கினர். வங்கி யின் மீது கருப்பு மையும் வீசப் பட்டது. அதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர் இந்தியன் வங்கியில் காலையில் இருந்தே வரிசையில் நின்ற பொது மக்க ளுக்கு பணமில்லை என்று வங்கி அதிகாரிகள் அறிவித்தனர். இத னால் ஆத்திரம் அடைந்த பொது மக்கள் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் போலீஸார் வந்து அவர்களை கலைந்துபோக வைத்தனர்.