வேந்தர் மூவிஸ் மதன் வாக்குமூலத்தை வைத்து எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்துவிடம் விசாரணை: மதனுக்கு போலீஸ் காவல் 2 நாட்கள் நீட்டிப்பு

வேந்தர் மூவிஸ் மதன் வாக்குமூலத்தை வைத்து எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்துவிடம் விசாரணை: மதனுக்கு போலீஸ் காவல் 2 நாட்கள் நீட்டிப்பு
Updated on
2 min read

வேந்தர் மூவிஸ் மதன் அளித் துள்ள வாக்குமூலத்தை வைத்து எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்துவிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

வேந்தர் மூவிஸ் நிறுவன உரிமையாளர் மதன் கடந்த மே மாதம் 29-ம் தேதி தலை மறைவானார். மருத்துவக் கல்லூரிகளில் ‘சீட்’ வாங்கித் தருவதாக பணம் வாங்கி ஏமாற்றிவிட்டதாக மதன் மீது 123 பேர் புகார் கொடுத் தனர். மொத்தம் ரூ.84 கோடியே 27 லட்சம் மோசடி செய்திருப்பதாக கூறப்பட் டது. இந்நிலையில் தலைமறை வான மதனைக் கண்டுபிடித்து தரக்கோரி அவரது தாயார் தங்கம் சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். மோசடி புகார்கள் மற்றும் ஆட் கொணர்வு மனு போன்ற வற்றால் மதனைப் பிடிக்க போலீஸார் தீவிர நடவடிக் கைகள் எடுத்தனர். இந்நிலை யில் திருப்பூரில், அவரது பெண் தோழி வர்ஷா என்ற வர்ஷினி வீட்டில் ரகசிய அறை யில் பதுங்கியிருந்த மதனை கடந்த 21-ம் தேதி போலீஸார் கைது செய்தனர்.

மதனிடம் விசாரணை

புழல் சிறையில் அடைக்கப் பட்ட மதனிடம் 7 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த சைதாப்பேட்டை 11-வது நீதி மன்றம் கடந்த 23-ம் தேதி அனுமதி வழங்கியது. அதைத் தொடர்ந்து மதனை எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து போலீஸார் விசாரித்தனர்.

மதன் மீதான மோசடி புகார்கள், மோசடி பணத்தில் வாங்கிய சொத்துகள் குறித்த தகவல்கள், இந்த மோசடியில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு இருக்கிறது, தலை மறைவாக இருந்தபோது எங்கெல்லாம் சென்றார் போன்றவை குறித்து போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டது.

போலீஸாரிடம் மதன் அளித்துள்ள வாக்குமூலத்தில், மாணவர்களிடம் வசூலித்த பணத்தின் ஒரு பகுதியை சினிமா தயாரிப்பு, விநியோகம் செய்ய பயன்படுத்தியதாகவும், மற்றொரு பகுதியை எஸ்ஆர்எம் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் கொடுத்ததாகத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அம்மா கிரி யேஷன்ஸ் சிவா, மதனின் நண் பர் பாலகுரு ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத் தினர். எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்துவின் மகன்களான ரவி பச்சமுத்து, சத்திய நாராயணா ஆகியோருக்கு பதிலாக அவர்களின் வழக்க றிஞர்கள் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். எஸ்ஆர்எம் பல்கலைக்கழக பதிவாளர் சேதுராமன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து எஸ்ஆர்எம் நிறுவனர் பச்ச முத்துவையும் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். அவரும் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

நேற்றுடன் மதனின் 7 நாள் போலீஸ் காவல் முடிந்தது. அதைத் தொடர்ந்து சைதாப் பேட்டை நீதிமன்றத்தில் மதனை போலீஸார் ஆஜர் படுத்தினர். அவரிடம் மேலும் 2 நாட்களுக்கு போலீஸ் காவலில் விசாரணை நடத்த அனுமதி கேட்டனர். நீதிபதி அனுமதியளித்ததை அடுத்து மீண்டும் போலீஸார் அழைத் துச் சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in