Published : 01 Nov 2016 01:25 PM
Last Updated : 01 Nov 2016 01:25 PM

143-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கரூர் நகராட்சி: 22-ம் ஆண்டில் கரூர் மாவட்டம்

கரூர் நகராட்சி 143-ம் ஆண்டிலும், கரூர் மாவட்டம் 22-ம் ஆண்டிலும் இன்று (நவ.1) அடியெடுத்து வைக்கின்றன.

தமிழகத்தில் 124 நகராட்சிகள் உள்ளன. இதில், கரூர் நகராட்சி 1874 நவம்பர் 1-ம்தேதி உருவாக்கப்பட்டது. அப்போது, நகர்மன்றத்தில் 16 வார்டுகள் இருந்தன. மக்கள் தொகை பெருக்கம், வருமான உயர்வு காரணமாக 1969-ல் முதல்நிலை, 1983-ல் தேர்வுநிலை, 1988-ல் சிறப்புநிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. நகராட்சியில் 32 வார்டுகள் இருந்த நிலையில் 1995-ல் 36 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 76,328 பேர் இருந்தனர்.

2011 உள்ளாட்சி தேர்தலுக்கு முன், கரூர் நகராட்சியுடன் இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள், சணப்பிரட்டி ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டன. இதனால் வார்டுகள் எண்ணிக்கை 48 ஆகவும், நகராட்சி மக்கள் தொகை 2.14 லட்சமாகவும் உயர்ந்தது. மாநகராட்சி தகுதியை எதிர்நோக்கி காத்துள்ள கரூர் நகராட்சி உருவாக்கப்பட்டு 142 ஆண்டுகள் நிறைவடைந்து 143-ம் ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது.

22-ம் ஆண்டில் கரூர் மாவட்டம்

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கோவை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த கரூர், கடந்த 1910-ல் திருச்சி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. அதன்பின், 1995 செப்டம்பர் 30-ம் தேதி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டமானது, திருச்சி, கரூர், பெரம்பலூர் என 3 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதே ஆண்டு நவம்பர் 1-ம் தேதி முதல் செயல்பட தொடங்கின. அதன்படி, கரூர் மாவட்டம் செயல்பட தொடங்கி 21 ஆண்டுகள் நிறைவடைந்து, இன்று 22-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x