பேச்சுவார்த்தையில் உடன்பாடு: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் தள்ளிவைப்பு

பேச்சுவார்த்தையில் உடன்பாடு: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் போராட்டம் தள்ளிவைப்பு
Updated on
1 min read

பெட்ரோல் பங்க் உரிமையாளர் களுக்கு கமிஷன் தொகையை உயர்த்தி வழங்குவது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் பெட்ரோல் பங்க் உரிமை யாளர்களிடையே மும்பையில் நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதை யடுத்து பெட்ரோல் பங்க் உரிமை யாளர்களின் போராட்டம் தற்காலி கமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்திய பெட்ரோலிய நிறுவ னங்கள் கமிஷன் தொகையை உயர்த்தி வழங்கவேண்டும் என்று கோரி பெட்ரோல் விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் கடந்த அக்டோபர் மாதம் 16-ம் தேதி முதல் பல்வேறு தொடர் போராட்டங்கள் நடந்து வந்தன.

இந்நிலையில், கமிஷன் தொகையை உயர்த்தி வழங்குவது குறித்து இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ் தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்களின் செயல் இயக்குநர் களுடன், இந்திய பெட்ரோலிய வணிகர்களின் கூட்டமைப்பு சார்பில் மும்பையில் நேற்று பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதுகுறித்து, இப்பேச்சு வார்த்தையில் பங்கேற்ற தமிழ்நாடு பெட்ரோல் டீலர்ஸ் கூட்டமைப்பின் தலைவர் கே.பி.முரளி ‘தி இந்து’விடம் கூறியதாவது:

பெட்ரோல் பங்க் உரிமை யாளர்கள் சங்கத்தினர் எண்ணெய் நிறுவனங்களுடன் மும்பையில் இன்று (நேற்று) பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் நாங்கள் வைத்த கோரிக்கை நியாயமானது என்று எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுக் கொண்டுள்ளன. குறிப்பாக, கமிஷன் தொகையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காண்பதாக தெரிவித்துள்ளன. மேலும், வங்கிகளுக்கு நாங்கள் செலுத்தும் தொகைக்கான கவுன்டிங் செலவாக பெட்ரோல் லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் லிட்டருக்கு 1 காசும் உயர்த்தி வழங்க எண்ணெய் நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன. இதைத் தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக தள்ளிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு முரளி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in