

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பரமக்குடியில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காகக் கொண்டுவந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. அதேசமயம் பணத்தை மாற்ற சாதாரண, சாமானிய மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர்.
கடந்த 8-ம் தேதி 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார். ஆனால் 6, 7-ம் தேதியன்றே பாஜக பிரமுகர்கள் உத்தரப் பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் புதிய 2 ஆயிரம் நோட்டுகளுடன் படம் பிடித்துக் காட்டியுள்ளனர். நவ. 9-ம் தேதி முதல் ஏடிஎம்களில் பணம் எடுக்கலாம் என அறிவித்தனர்.
ஆனால் சொன்னபடி பணம் அனுப்பப்படாததால் ஏடிஎம்கள் செயல்பட வில்லை மக்களின் இன்னல்களை கண்டுகொள்ளாமல், லஞ்சப் பணத்தை காப்பாற்றுவதில் தமிழக அமைச்சர்கள் கவனம் செலுத்தி வருகின் றனர். அதிமுக அரசு ஊழலில் ஊறிப்போய் உள்ளது. தமிழகத்தில் 2 மாதங்களுக்குள் ஆட்சி மாற்றம் ஏற்படும். மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என்றார்.