

சேலத்தில் பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 1,000 பக்க குற்றப் பத்திரிகையை சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜன், ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
பாஜக மாநில செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் சேலம் மரவனேரியில் உள்ள தனது வீட்டில், கடந்த ஆண்டு ஜூலை 19-ம் தேதி மர்ம கும்ப லால் வெட்டிக் கொலை செய்யப் பட்டார்.
இது சம்பந்தமாக சிபிசிஐடி போலீஸார் வழக்கு பதிவு செய்து, பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில், போலீஸ் பக்ரூதின் உள்ளிட்டோரை கைது செய்து, வேலூர் சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு விசாரணை சேலம் ஜே.எம்., எண்:4 நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சம்பவம் நடந்து 150 நாட்கள் கடந்துவிட்ட நிலையில், சிபிசிஐடி போலீஸார் குற்றபத்திரிகை தாக்கல் செய்யாமல் இருந்தனர்.
நீதிமன்றம் மூலம் காலஅவகாசம் கேட்ட நிலையில், வரும் ஏப்., 10ம் தேதிக்குள் குற்றப்பத்திரிகை தாகல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் மூலம் உத்தரவிடப்பட்டது.
இந்நிலையில், சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி ராஜன், ஆய்வாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நேற்று ஆயிரம் பக்கம் கொண்ட ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு சம்பந்தமான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.