ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்காகத்தான் மோடி வீட்டை விட்டு வெளியேறினார்: பிருந்தா காரத் கருத்து

ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்காகத்தான் மோடி வீட்டை விட்டு வெளியேறினார்: பிருந்தா காரத் கருத்து
Updated on
1 min read

பிரதமர் மோடி, நாட்டுக்காக வீட்டை விட்டு வெளியேறவில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்காகவே வெளியேறினார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் கூறியுள்ளார்.

இந்திய சமூக விஞ்ஞான கழகம் சார்பில், ‘பாஜக அரசின் பொது சிவில் சட்டமும், கறுப்புப் பண ஒழிப்பும்’ என்ற தலைப்பில் வி.பி.சிந்தன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னை கேரள சமாஜத்தில் நேற்று நடந்தது.

இதில் பங்கேற்ற பிருந்தா காரத், நிருபர்களிடம் கூறியதாவது:

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் அறிவித்துள்ளார். கறுப்புப் பண ஒழிப்புக்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் கூறுகிறார். இது மக்களை ஏமாற்றும் வேலை. இந்த முயற்சியை முடித்துக்காட்டாமல் விடமாட்டேன் என்றும், நாட்டுக்காகத்தான் வீட்டை விட்டு வெளியேறினேன் என்றும் பிரதமர் மோடி உணர்ச்சிப்பூர்வமாக கூறினார். அவர் நாட்டுக்காக வீட்டை விட்டு வெளியேறவில்லை. ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்காகவே வெளியேறினார்.

ரூபாய் நோட்டுகளைத் தடை செய்வதால் கறுப்புப் பணம் ஒழியும், பயங்கரவாதம் வேரறுக்கப்படும், கள்ள நோட்டுப் புழக்கம் நின்றுவிடும் என்று பிரதமர் கூறினார். ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவிப்பதால், பயங்கரவாதம் எப்படி கட்டுப்படுத்தப்படும் என்று தெரியவில்லை.

கறுப்புப் பணம் வைத்திருப் பவர்களில் 97 சதவீதம் பேர் வெளிநாடுகளில் உள்ள வங்கி களிலும் இந்தியாவில் தங்கம், வைரம், ரியல் எஸ்டேட் போன்ற துறைகளிலும் முதலீடு செய்துள்ள னர். 3 சதவீதம் பேர்தான் ரொக்க மாக வைத்துள்ளனர். முறையாக கறுப்புப் பணத்தை கண்டுபிடிக்கா மல், 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்து உழைக்கும் மக்களை மத்திய அரசு துன்பத்துக்கு ஆளாக் கியுள்ளது. இதைக் கண்டித்து இடதுசாரிகள் நடத்தும் போராட் டத்தை நாட்டு மக்கள் மிகப்பெரிய வெற்றியடையச் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் ஃப்ரன்ட் லைன் ஆசிரியர் விஜயசங்கர், அகில இந்திய மாதர் சங்கத்தின் தமிழக தலைவர் உ.வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in